ஜம்மு- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 5 தீவிரவாதிகள் பலி.! பாதுகாப்பு பலப்படுத்தல்.!
ஜம்மு- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது .
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டாவின் நான் பகுதியில் உள்ள பான்டோல் பிளாசா அருகே இன்று அதிகாலை 5 மணி முதல் பாதுகாப்பு படையினருக்கும் , பயங்கரவாதகிளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
பான்டோல் பிளாசா அருகே உள்ள ஒரு வாகனத்தில் ஒளிந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். நடந்து வரும் மோதல் காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நக்ரோட்டா மற்றும் உதம்பூர் பகுதிகளில் போக்குவரத்து இயக்கத்தையும் தடை செய்துள்ளது. நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.