2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை…!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ராம்குமார், குசும் தேவி, மனிஷா, சவிதா, மீனாட்சி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாக்ஷி எனும் ஐந்து வயது குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி அஜய் குமார் கூறுகையில், 5 பேரின் தலையிலும் பலத்த காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொடூரமான கொலையை செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கான விசாரணை மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியோடு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025