#ஆம்பன் எதிரொலி: மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேர் வெளியேற்றம்..!
ஆம்பன் புயல் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தற்பொழுது அங்கு பலற்ற காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும், ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார.
மேலும், ஃபானி புயலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளளவுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.