டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம்.! துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகள் மீட்பு.!
டெல்லில் கொலையுண்டான ஷார்த்தவை, கொலையாளி அப்தாப் துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகளை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அண்மையில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாகிய கொலை சம்பவம் என்றால் அது டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு தான். லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா – அப்தாப், திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய ஷ்ரத்தா வற்புறுத்தியதால் கொலை நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை கடந்த மே மாதம் நடந்துள்ளது. கொலை சம்பவம் வெளியில் தெரிய கூடாது என அப்தாப் செய்த காரியங்கள் தான் நம்மை திகைக்க வைக்கின்றன. ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி அதனை பல்வேறு பகுதிகளில் வீசி அப்புறப்புடத்தியுள்ளன கொடூர கொலையாளி அப்தாப்.
விஷயம் வெளியில் தெரிந்து விட கூடாது என ஷ்ரத்தாவின் சமூக வலைதள பக்கங்களையும் அப்தாப் தான் நீண்ட நாட்கள் உபயோகித்து வந்துள்ளான் என்பதும் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை. தன் மகளை நீண்ட தொடர்புகொள்ள முடியவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் தான் இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அப்தாப் கொலை செய்ய பயன்படுத்திய ஆதாரங்கள் நீண்ட மாதங்கள் ஆகிய காரணத்தால் அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அதனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் தற்போது ஷ்ரத்தா உடலை துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெட்ட பயன்படுத்திய மரக்கட்டை மற்றும் ஒரு ரம்பம் ஆகியவை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.