ஒரு நாளைக்கு 5 கி.மீ தூரம்.. 1 வருடம் கழித்து கேரளாவை அடைந்த.. 74 டயர்களைக் கொண்ட டிரக் ..

Default Image

 ஆட்டோகிளேவ் (aerospace autoclave) என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் இயந்திரத்தை ஏற்றிகொண்டு ஒரு பிரம்மாண்டமான டிரக், மகாராஷ்டிராவிலிருந்து, கேரளாவில் உள்ள வி.எஸ்.எஸ்.சி (விக்ரம் சரபாய் விண்வெளி மையம்) வர ஒரு வருடம் ஆனது.

இந்த பிரமாண்டமான 74 சக்கரம் கொண்ட டிரக்  கடந்த 2019 ஜூலை மாதம் நாசிக் நகரை விட்டு வெளியேறியது. மொத்தம் 1,700 கி.மீ தூரத்தை கொண்ட 4 பிற மாநிலங்களை கடந்து, இறுதியாக விரைவில் அதன் இலக்கை அடைய உள்ளது.

இந்த டிரக் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கிலோமீட்டர் மட்டுமே செல்லும், இந்த லாரி முழு சாலையையும் அடைத்து கொள்ளும், இதனால், 32 பேர் கொண்ட ஒரு குழு தேவைப்படுகிறது. இவர்கள் அதிகாரிகள் மரங்களை வெட்ட வேண்டும், லாரிகளை சீராக நகர்த்துவதற்காக மின் இணைப்புகளை அகற்ற வேண்டும்.  குறிப்பாக நகரங்கள் அல்லது நகரங்களுக்குள் நுழைவதற்கு முன்பு அவர்கள் வருகை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பார்கள்.

நாசிக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான விண்வெளி ஆட்டோகிளேவ் இயந்திரம் 70 டன் எடையுள்ளதாகவும்,  7.5 மீட்டர் உயரமும், 6.65 மீட்டர்  அகலமும் கொண்டது.

ஏறக்குறைய ஒரு வருட பயணத்திற்குப் பிறகு, இந்த லாரி இறுதியாக இந்த மாத தொடக்கத்தில் கேரள மாநிலத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது இந்த மாத இறுதிக்குள் கேரளாவின் வட்டியூர்கவுவில் உள்ள வி.எஸ்.எஸ்.சி (விக்ரம் சரபாய் விண்வெளி மையம்)  அடைய திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்