திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், டிவைடரில் மோதிய நிலையில், கார் மீது எதிர்ப்புறம் வந்த லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அனந்தபூரில் உள்ள ராணி நகரை சேந்த ஷேக் பாஷா என்பவர் தனது திருமணத்திற்காக ஹைதராபாத் சென்று துணிகள் வாங்கிவிட்டு திரும்பும் போது அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.
அப்போது, ஹைதராபாத் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது பலமாக மோதி இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025