அசாமில் லாரிகள் மீது தீ வைப்பு – 5 பேர் உயிரிழப்பு…!
அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததில், 5 பெற்ற உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்த லாரிகள் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மீது தீ பரவியதால், 7 லாரிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது லாரியில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக தீ வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.