ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஹரியானாவில் 5 பேர் உயிரிழப்பு!

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஹரியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் நிறைந்து வழிவதால் மருத்துவமனை நிர்வாகம் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகள் இல்லாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிரிசா எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநரத்தில் இது போன்று வேறு இரு இடங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. குருகிராமில் உள்ள மருத்துவமனையில் 4 நோயாளிகளும், ரேவாரி மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025