12 மாநிலங்களுக்கு 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்!
கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விட்டுள்ளது.
அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச கூடும், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.