ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் வெற்றி பெற்ற விவசாயியின் 5 மகள்கள்..!

Default Image

ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த ராஜஸ்தான் பொது சேவை மையம் மற்றும் ராஜஸ்தான் நிர்வாக சேவை மையம் தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

இதில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகள்கள் தேர்வாகியுள்ளனர். இவரின் பெயர் ஸ்ரீ சஹதேவ் சஹாரன். இவருக்கு 5 மகள்கள். இதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு என்ற இரண்டு மகள்கள் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகுதி பட்டியலில் இவரின் மற்ற மூன்று மகள்களான அன்ஷூ, ரீது மற்றும் சுமன் ஆகியவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளதாவது,

இது ஒரு அருமையான நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கரைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் சேர்ந்து RAS தேர்வில் தேர்வு செய்யப்பட்டனர். தந்தை மற்றும் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்