சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அரசு உயர்த்தும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களின் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் 30 சதவீத வருமானம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வருகிறது. ஏற்றுமதியில் 48 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வந்தவை.
இன்று வரை 11 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளோம் என டெல்லியில் இணையம் வழியாக “லெட்ஸ் எண்டோர்ஸ் டெவலப்மென்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கட்கரி கூறினார். வரவிருக்கும் 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீத ஏற்றுமதியாகவும், 5 கோடி பேருக்கு புதிய வேலைகளை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுபோன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை கிடைக்காது என எனக் குறிப்பிட்டார். அத்தகையவர்களை பதிவு செய்ய ஊக்குவிக்க எங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி தேவை என்று அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மாற்றாக இப்போது சிந்திக்க வேண்டும் எனவும் , நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…