அசாமில் கடுமையான நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு..!
அசாமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
அசாமில் இன்று காலை 8.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அருகில் இருந்த மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கோல்பாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், 14 கி.மீ. ஆழம் வரை உணரப்பட்டும் இருந்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அசாம் பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். பரந்த வெளி பகுதியில் மக்கள் நின்றுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.