Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.
ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள் இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நம் நாட்டில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான தனி நபர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் 52 வயதான தொழிலதிபர் ஒருவர் இது போன்ற மோசடியில் சிக்கி ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.
கடந்த மார்ச்-11 ம் தேதி அன்று பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத்துக்கு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதில் லாபகரமான பங்குச் சந்தை வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் bys-app.com யிலிருந்து ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படி இருந்தது. ஆனால் அவர் அதை க்ளிக் செய்யாமல் புறக்கணித்தார். பின் Y-5 எவர் கோர் ஃபைனான்சியல் லீடர் (Y-5 Ever Core Financial Leader) என்ற வாட்ஸ்-ஆப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத் அதையும் புறக்கணித்துள்ளார். மேலும், அந்த மோசடி கும்பல் இவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் இவரை பல முறை தெரியாத எண்களில் இருந்து போன் செய்து அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய ஆசை வார்த்தைகள் பேசி அவரை தூண்டி உள்ளனர். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும், இறுதியில் இதை ஒரு முறை முயற்ச்சித்து பாப்போம் என மனமிறங்கி சரத் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல்-2 ம் தேதிக்குள் அந்த மோசடி கும்பல் பொய்யான சில வங்கி கணுக்குகளை காண்பித்து அவரை நம்ப வைத்து அந்த கணுக்குகளில் சிறுது சிறுதாக பணத்தை முதலீடு செய்ய வைத்து மொத்தமாக ரூ.5.2 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளனர். சிறுது நாட்களுக்கு பிறகு தமக்கு லாபம் ஏதும் வராமல் இருக்கையில், பாதிக்கப்பட்டவர் தனது லாபத்தில் சிலவற்றை திரும்பப் பெற முயன்றபோது மோசடி செய்பவர்கள் மறுத்துவிட்டனர்.
அப்போது தான் அவருக்கு தாம் மோசடி கும்பலால் ஏமாற்ற பட்டுளோம் என உணர்ந்துள்ளார். அதன் பின் பெங்களூரு காவல் துறைக்கு அவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் (FIR ) மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து இந்த குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…