5 மாவோயிஸ்ட்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசா மாநிலம் மல்காங்கிரி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பணியை சிறப்பு படை போலீசார் மேற்கொண்டனர். அப்போது மறைந்து இருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு தாக்குதலை மேற்கொண்டனர். இருதரப்பு இடையே நேரிட்ட சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் என டிஜிபி ஆர்.பி. சர்மா கூறியுள்ளார். இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்தஒரு காயமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையின் போது தப்பி ஓடிய மாவோயிஸ்ட்களை தேடும் பணி தொடர்கிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டை நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
dinasuvadu.com