5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி : கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க – வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது.
இந்நிலையில், தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும், கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.