5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாநிலங்களில் பா.ஜ.க அரசு மக்கள் நலனுக்காக அயராது உழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சந்திரசேகர ராவ் கட்சிக்கும், மிசோரமில் வென்றுள்ள மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் என, பா.ஜ.க தொண்டர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…