"5 மாநிலங்களுக்கு தேர்தல்" தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை- தேர்தல் ஆணையர் தேதி அறிவிப்பு..!!
மிசோரம், மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான் , தெலுங்கானா , சத்திஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தார்.தேர்தல் நடத்தல் விதிமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது என்றும் இந்த முறை ஐந்து மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்கும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக வாக்கு பதிவு நடைபெறும்.முதல் கட்ட வாக்குப்பதிவானது நவம்பர் 12ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறும் என்றார்.அதே ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி என்றும் , மிசோரம் , மத்தியபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.திருப்பரங்குன்றம் , திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
DINASUVADU