குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் 5 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் நடந்து இருக்கிறது.
பாவ்நகர் மாவட்டத்தில், பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.இந்த நிலையில் இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார். இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக கிணற்றில் குதித்தனர்.
ஆனால் அதற்குள் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள்.
2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…