செல்போன் திருடியவருக்கு குர்கான் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அனுராக் ஹோடா கூறியதாவது:
செல்போன் திருடியவருக்கு குர்கான் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அனுராக் ஹோடா கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 அன்று செல்போன் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சோஹ்னாவைச் சேர்ந்த நந்த் கிஷோர் மற்றும் இவரது சிறார் சீர்திருத்தப் பள்ளி நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கிஷோர் சிறைக்கும் அவரது நண்பர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணையில் கிஷோர் குற்றம் செய்து நிரூபணமானது. இந்நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இது தவிர அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே. சோந்தி நேற்று வழங்கினார். ஜூவனைல் ஜஸ்டிஸ் போர்டு கிஷோரின் நண்பரை விசாரித்து வருகிறது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் செல்போன் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் திருட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. செல்போன் திருட்டில் ஐ.எம்.இ.ஐ எண்ணை அழிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்திருந்தது.
அவ்வகையில் கிஷோர் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தன்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…