இன்று பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு மீதான 4வது வழக்கில் தீர்ப்பு!
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக, நான்காவது வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
லாலு மீது சிபிஐ பதிவுசெய்த 6 வழக்குகளில், மூன்றில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தும்கா கருவூலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணை, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், ஊழல் நடந்ததாக கூறப்படும் ஆண்டில், பொது கணக்காளர்களாக இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என லாலு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.