இரண்டு மாவட்டங்களில் ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் 4 ஜி சேவை.!

Default Image

ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 4ஜி இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து 4 ஜி இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் காந்தர்ப்பல் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் அதிவிரைவு 4 ஜி இணைய சேவைகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவின் பரிந்துரையைபடி இரண்டு மாவட்டங்களில் இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இரண்டு மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 18 மாவட்டங்களில் 2 ஜி இணைய சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்