ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் என்பது என்ன.? அடுத்த ஆலோசனை பற்றிய முக்கிய விவரங்கள் இதோ…

Default Image

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை வழங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது டெல்லியில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது.  

2017, ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி கொள்கையான ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி என்பதை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் குழு எனும் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் குழுவானது மத்திய அரசுக்கு வரிகள் குறித்தான பரிந்துரைகளை வழங்கும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் தலைவராக அப்போதைய மத்திய நிதி அமைச்சர் யாரோ அவர் இருப்பார். அந்த வகையில் தற்போதைய ஜிஎஸ்டி கவுன்சில் தலைவராக மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இந்த குழுவில் 33 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் எதற்கெல்லாம் வரியை விரிக்கலாம், உயர்த்தலாம், குறைக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து அதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்.

இந்த ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டமானது அவ்வபோது நடைபெறும். இதுவரை 48 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது வருகிற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த கவுன்சில் கூட்டத்தில் புகையிலை, பான் மசாலா உள்ளிட்டவைகளுக்கு வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பட்ஜெட் அண்மையில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இந்த கவுன்சில் கூட்டம் நடைபெறுவதால் மிகவும் முக்கியமாக இந்த கவுன்சில் கூட்டம் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டிற்கான வரியை 16 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். அதேபோல பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கும் வரியை உயர்த்த ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் சூதாட்டத்திற்கும் வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்