முழு ஊரடங்கு.! மருந்துகடைகள் கூட 48 மணிநேரத்திற்கு இந்த ஊரில் திறக்க அனுமதியில்லை.!
இந்தியா முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துக்கடை, மளிகை, காய்கறி, உணவகம் ஆகியவை மட்டும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மக்கள் அன்றாட அத்தியவசிய தேவைகளை காரணம் காட்டி பலர் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த, ஒடிசா அரசு, புவனேசுவரம் மற்றும் பத்ராக் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரையில் 48 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மருந்து கடை, மளிகை கடை போன்ற அத்தியாவசிய கடைகள் கூட திறந்திருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.