இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேர் உயிரிழந்துள்ளனர்.!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகிறது. அந்த அவகையில், இந்தியாவில் 81,84,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,22,111 பேர் உயிரிழந்துள்ளனர், 74,91,513 இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களை விட 7 மடங்கு பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,964 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 470 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, மருத்துவமனைகளில் 5,70,458 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.