“மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்”- மேற்கு ரயில்வே!
மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கூடுதலாக 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு 46 சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, மும்பையில் செப்டம்பர் 1 முதல் 6- ம் தேதி வரை நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கூடுதலாக 46 சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.