கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு வீசப்பட்ட நிலையில், 46 குரங்குகள் உயிரிழந்துள்ளது.
கர்நாடகாவிலுள்ள ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோணிப்பைகளில் கட்டி போட்டு சக்லேஷ்பூர் மற்றும் பேகூர் இடையே உள்ள சாலையில் வீசி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கோணிப்பைக்குள் இருந்த 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த குரங்குகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், மீதமுள்ள 46 குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கர்நாடக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…