நிறுவன தனிமைப்படுத்துதலில் விலக்கு பெற 45,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.!
நிறுவன தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு பெற டெல்லி 45,288 சர்வதேச பயணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் மூலம் டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிலும், அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி விமான நிலையம் ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற ஒரு திட்டத்தை ஆகஸ்ட் 8 முதல் அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் சர்வதேச பயணிகளிடமிருந்து சுமார் 45,288 விண்ணப்பங்கள் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் 96 மணி நேரத்திற்கு முன் செய்யப்பட்ட சோதனையிலிருந்து நெகட்டிவ் என இருந்தால், அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அரசு கடந்த மாதம் கூறியிருந்தது.
டெல்லி விமான நிலையம் இதற்காக ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. அதில், ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் விதிமுறைகளின்படி, விமானத்திற்கு வருவதற்கு சில நாள்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் செய்யவில்லை என்ற ஒரு சுய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனால், சர்வதேச பயணிகள் கட்டாய நிறுவன சுய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற முடியும் என தெரிவித்து இருந்தது. இதில், அமெரிக்கா (15,027), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (4,512), இங்கிலாந்து (4,094), கனடா (3,416) மற்றும் ஆஸ்திரேலியா (2,687) பேர் தனிமைப்படுத்தப்பட்ட விலக்கு விண்ணப்பங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.