பெங்களூரில் போலீஸ் ஜீப்பை திருடி 112 கிலோ மீட்டருக்கு பயணம் செய்ததாக, 45 வயது நபரை, தார்வாட் போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் பெங்களூரில் போலீஸ் ஜீப்பைத் திருடி 112 கிலோமீட்டர் சாலைப் பயணம் சென்றதற்காக 45 வயது நபர் தார்வாட் போலீஸாரால் கைது செய்யப்ட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபர் போலீஸ் ஜீப்பை ஓட்டும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக வாகனத்தை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் அன்னிகேரி நகரைச் சேர்ந்த நாகப்பா ஹடபட் என்றும் அவர் பிரபல லாஜிஸ்டிக் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர் என்றும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் தனது வேலையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் லாரிகளை ஓட்டி வந்ததாகவும், இதனிடையே அவர் போலீஸ் ஜீப்களால் கவரப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அன்னிகேரி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்ததை ஹடபட் பார்த்துள்ளார். பணியில் இருந்த இரண்டு போலீசாரும் காவல் நிலையத்திற்குள் இருந்ததால், சாவியை ஜீப்பில் வைத்துவிட்டு சென்றுததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அன்னிகேரி காவல் நிலைய ஆய்வாளர் எல்.கே.ஜூலகட்டி கூறுகையில், போலீஸ் ஜீப்பில் ஆட்கள் இல்லாமல் இருந்ததால், தனது கனவை நிறைவேற்ற வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றுள்ளார். இரவு முழுவதும் ஜீப்பை ஓட்டிக்கொண்டு, அன்னிகேரி நகரத்திலிருந்து 112 கிமீ தொலைவில் உள்ள மோட்பென்னூர் ஹாவேரி மாவட்டத்தை அடைந்துள்ளார். நீண்ட தூரம் சென்ற பின், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, வாகனத்திற்குள் தூங்கியுள்ளார்.
சாலையோரம் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்த அப்பகுதி மக்கள், அந்த சந்தேக நபர் ஹடபட் வாகனத்திற்கு உள்ளே தூங்குவதைக் பார்த்துள்ளனர். டிரைவர், போலீஸ் போல் இல்லாததால், உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, உள்ளூர் போலீஸ் அந்த இடத்திற்கு சென்று, அந்த நபரை பிடித்ததாகவும், பின்னர் வாகனத்தை சம்பந்தப்பட்ட அன்னிகேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
தார்வாட் போலீஸ் சூப்பிரண்டு பி.கிருஷ்ணகாந்த் கூறுகையில், ஜீப்பை திருடி சென்ற நபர், மேலும் ஓட்டுவதற்கு வாகனத்தில் போதுமான எரிபொருள் இருந்தது. ஆனால் அவர் தனது விருப்பம் நிறைவேறிய பிறகு நிறுத்த முடிவு செய்துள்ளார். காவலில் உள்ள சந்தேக நபரிடம் கடந்தகால குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையில், போலீசார் ஐபிசி பிரிவு 379 இன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்து, சந்தேக நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…