பெங்களூரில் 45 வயது மருத்துவர் ஒருவர் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய மருத்துவர் அம்பரிஷ் விஜயராகவன், சைக்காலஜி துறை உதவிப் பேராசிரியராகவும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் பணிக்கு வந்து, சக மருத்துவர்களிடம் சாதாரணமாகவே பேசி சிரித்து இருந்துள்ளார். ஆனால் புதன்கிழமை அன்று இரவு 11.45 மணி அளவில் அவர் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது கார் பழுதாகிவிட்டதாகவும், பழுது பார்க்க சென்றிருந்தது குறித்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததையும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது. அதுவே அவரை கடைசியாக பார்த்தது எனவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் இது குறித்து அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் தன்னிடம் எதை குறித்தும் ஆலோசிக்க மாட்டார் எனவும், ஆனால் சில மாதங்களாக அவர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து சதாசிவ நகர் காவல் துறையினர் கூறுகையில், மருத்துவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் தற்கொலை குறித்து எந்த ஒரு தகவலும் தற்பொழுது வரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மருத்துவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த மருத்துவரின் உடல், அதன் பின் அவரது குடும்பத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…