3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்..! யூடியூப் நிறுவனம் அதிரடி…!
கடந்த 3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூடியூப் சேனல்களை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக, சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பலரும் வருவாய் ஈட்டியும் வருகின்றனர்.
இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பும் சேனல்கள் மற்றும் ஸ்பாம் சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூடியூப் நிறுவன சமூக விதிமுறைகளை மீறுதல் மற்றும் ஸ்பேம் ரக காணொளிகளை பதிவேற்றியதற்காகவும் இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.