கேரளாவிற்கு 44 விமானம்.! தமிழகத்திற்கு ஒன்று கூட இல்லை.!
அரபு அமீரகத்திலிருந்து 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.
மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு 56 விமானங்கள் இயங்க உள்ளனர்.
அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட அறிவிக்கவில்லை அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும், கேரளா, பீகார், மகாராஷ்டிரா,குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
56 விமானங்களில் 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதது, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.