சிங்கு எல்லை பிரச்சினையின் போது எஸ்.எச்.ஓவை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் கைது!
டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் எஸ்.எச்.ஓவை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிறது. அகிம்சை முறையில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த இரு தினங்களாக வன்முறையாக வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் போராட்டம் நேற்று முன்தினம் பயங்கரமாக வெடித்தது. இதனை எடுத்து பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அங்கு சென்று தடியடி நடத்தினர்.
இதில் காவல்துறை அதிகாரி ஒருவரை ரஞ்சித் சிங் என்னும் 22 வயதுடைய விவசாயி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். தற்பொழுது போலீசாரை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.