பேஸ்புக்கில் நீக்கப்பட்ட #Resignmodi ஹேஸ்டேக்….! காரணம் இதுதானா…? விளக்கமளித்த பேஸ்புக் நிறுவனம்…!
மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால், நாங்கள் முடக்கவில்லை. அது தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது.
பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏதாகிலும் ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு #Resignmodi என்ற ஹேஷ்டேக் பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட சில மணி துளிகளில் இதில் மளமளவென பதிவுகள் பதிவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென இந்த ஹேஸ்டேக் காணாமல் போனது. இதனையடுத்து மத்திய பாஜக அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததால் தான் #Resignmodi என்ற ஹேஸ்டேக் நீக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து மீண்டும் இந்த ஹேஷ்டேக் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால், நாங்கள் முடக்கவில்லை. அது தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இந்த ஹேஸ்டேக் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.