ரூ.425 கோடி மதிப்பிலான 61 கிலோ போதைப் பொருள்களுடன் சென்ற ஈரானியப் படகை, இந்தியக் கடலோர காவல்படை கைது செய்தது.
குஜராத்தில் அரபிக்கடலில் ரூ.425 கோடி மதிப்புள்ள 61 கிலோ ஹெராயினுடன் 5 பேருடன் சென்ற ஈரானிய படகு ஒன்றை, இந்தியக் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. குஜராத்தின் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
படகு மற்றும் 5 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக ஓகாவுக்கு கொண்டு வரப்பட்டனர். உளவுத்துறை தகவலின்படி இந்திய கடலோர காவல்படை, தனது இரண்டு விரைவு ரோந்து வகை கப்பல்களை ரோந்து பணிக்கு அனுப்பியது, அப்போது இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் சுற்றியதை, நோக்கி துரத்தி நிறுத்தப்பட்டது.
பிறகு விசாரணையில், படக்குழுவினர் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 425 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 61 கிலோ போதைப் பொருட்கள் படகில் தீவிர சோதனைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய கடலோர காவல்படை சமீபத்தில் இதுவரை எட்டு வெளிநாட்டு கப்பல்களை கைது செய்து ரூ.2,355 கோடி மதிப்புள்ள 407 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…