பரபரப்பு…பொதுத்தேர்வில் முறைகேடு – 42 ஆசிரியர்கள் கைது!

Default Image

கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

முதல் நாளில் தேர்வு தொடங்கிய ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, கர்னூல் மாவட்டத்தில் இருந்து தெலுங்கு வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு வாட்ஸ்அப்பில் பரவியது.இதனையடுத்து,இரண்டாம் நாள் இந்தி தேர்வு மற்றும் மூன்றாம் நாள் ஆங்கிலம் தேர்வு வினாத்தாள் சத்ய சாய், கர்னூல் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது.

ஆனால்,வினாத்தாள் உண்மையில் வெளியாகவில்லை எனவும்,மாறாக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில ஆசிரியர்கள் வேண்டுமென்றே வாட்ஸ்அப்பில் வினாத் தாள்களை பரப்பினர் என்றும் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக,ஆந்திர மாநில கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:”இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில ஆசிரியர்களின் கைவரிசையை நாங்கள் உடனடியாகக் கண்டுபிடித்தோம்.அவர்கள் சில வெளியாட்களின் உதவியுடன் வினாத்தாள்களின் ‘கசிவு’ குறித்து வதந்திகளைப் பரப்பினர்.இதன்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்’,என்று தெரிவித்தார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், முறைகேடுகளுக்கு எதிரான விதிகளின் கீழ் தவறு செய்த ஆசிரியர்கள் மீது கைது மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்