டெல்லியில் இந்த ஆண்டு மட்டும் 42 காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு…!
- டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது, 4 பெண் போலீசார் உட்பட, 42 காவல்துறையினர் உயிரிழப்பு.
- டெல்லியில் 5,981 காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வந்தது.
அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலின் போதும், நான்கு பெண் காவல் 4 பெண் போலீசார் உட்பட மொத்தம் 42 காவல்துறையினரால் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,981 காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 77 காவல்துறையினர் டெல்லியில் உயிரிழந்து உள்ளனர்.2020 ஆம் ஆண்டில் 35 காவல்துறையினரும், 2021 மார்ச் 11-ஆம் தேதி முதல் 42 காவல்துறையினரும் இறந்துள்ளனர்.மேலும் இறந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சமீபத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் சலுகைகளின் நிலையை ஆய்வு செய்தார்.