கொரோனா இரண்டாம் அலையில் டெல்லியில் மட்டும் 42 காவலர்கள் உயிரிழப்பு!
- கொரோனா இரண்டாம் அலை காரணமாக டெல்லியில் மட்டும் 42 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
- உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சில நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது தான் சற்று கொரோனாவின் புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனா இரண்டாம் அலையில் பல மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் மக்களை பாதுகாக்க கூடிய காவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதுடன் பலர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையில் டெல்லியில் மட்டும் நான்கு பெண் காவலர்கள் உட்பட 42 காவல்துறையினர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு டெல்லியில் தற்போது சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.