மகாராஷ்டிராவில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 4,130 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,82,117 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 1,37,707 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 50,466 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மட்டும் 5,506 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 62,88,851 ஆக உயர்ந்துள்ளது.