சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி!

workers

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சிக்கினர். இவர்களை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நொடிக்கு நொடி சவால் மற்றும் இயந்திரம் கோளாறு என பல தடைகளை தாண்டி 17 நாட்கள் போராட்டத்துக்கு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர், எலி வளை தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அரசின் திட்டங்கள் எம்பிக்கள் போஸ்டர் ஓட்டுவதற்கு பயன்பட கூடாது.! பிரதமர் மோடி பேச்சு.!

மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த மீட்பு பணியில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பாறை மற்றும் மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் வழங்கி முக்கிய பங்காற்றியது.

இந்த நிலையில், சுரங்கப்பாதை விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் தங்களின் வீடுகளுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், 41 தொழிலாளர்களும் உடல் மற்றும் மனரீதியாக நலமாக இருப்பதால் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ரிஷிகேஷியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்