முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து கடைகளும் மக்கள் கூடும் வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரம் அதிகமாக காணப்பட்டால், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர் சந்திப்பின் போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ஊரடங்கி நீட்டிப்பது குறித்து, மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டாம். கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றினால், 30 நாட்களில் 406 பேருக்கு பரப்ப முடியும் என தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…