இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். 3,18,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,18,92,676 ஆகவும்,குணமடைந்தோர் எண்ணிக்கை 1,79,30,960 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54,000 பேருக்கும், கர்நாடகாவில் 49,000 பேருக்கும், கேரளாவில் 38,000 பேருக்கும் தொற்றுகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மே 10-ஆம் தேதி முதல் மே – 14ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.
மேலும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், ஏழு மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக விஜயராகவன் அவர்கள் மூன்றாவது கொரோனா வைரஸ் அலையை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…