ஓரே நாளில் 400 போலீஸார் பணியிட மாறுதல்: புதுவை டிஜிபி அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது.
ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்
தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் 400 மேற்பட்ட போலீசாரை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் 400 மேற்பட்ட போலீசாரை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை புதுவை காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.