4,00,00,000 ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வைத்திருக்கும் நடிகர்கள் மறந்து விடக்கூடாது…!!நடிகர்கள் மீது நடிகை பாய்ச்சல்…

Published by
Dinasuvadu desk

கேரள வெள்ளத்துக்கு குறைவான நிதி வழங்குவதா?

கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். சொந்தபந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் , இந்நிலையில் நம்முடைய மக்களுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற நடிகர்கள் பலரும் உதவும் நிலையில் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது என்று பழம்பெரும் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை கண்டித்துள்ளார்..

அவர் கூறியதாவது ,

ஒரு படத்துக்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களும் ஒரு மாத சம்பளமாக ரூ.40 லட்சம் வரை பெறும் நகைச்சுவை நடிகர்களும் மழை வெள்ள பாதிப்புக்கு சில லட்சங்கள்தான் கொடுத்துள்ளனர் மலையாள நடிகர்கள். ரூ.4 கோடி ரூபாயில் சொகுசு கார் வைத்திருக்கும் முன்னணி நடிகர்கள் கூட  தொகை சில லட்சங்கள் தான் வழங்கியுள்ளனர்.

கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?என்றும், நம்முடைய  பெயர் புகழ் பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள்தான். அவர்கள் கொடுத்த பணத்தில்தான் நாம் அனைவரும் சொகுசாக வாழ்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என அவர் தெரிவித்தார்…

இப்போது நம்மை வாழ வைக்கும் மக்கள் வீதியில் நிற்கிறார்கள்  எனவே நடிகர்கள் நாமும் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம். நட்சத்திர கலைவிழா நடத்தியும் நிதி திரட்டலாம்.” இவ்வாறு ஷீலா கூறினார்…

நடிகை ஷீலா 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகையாக இருந்தார். அவர் பாசம், பணத்தோட்டம், இதய கமலம், சந்திரமுகி உள்பட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

5 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

6 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

6 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

7 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

8 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

8 hours ago