ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரத்தை அகற்ற முயன்ற போது விபரீதம்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு முன்பு 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்று இருந்துள்ளது. இது கடந்த 1963 அமைக்கப்பட்டது.
இது மிகவும் பழமையானதாக காணப்பட்டதால், புதிதாக கொடிமரம் வைப்பதற்காக அந்த பழைய கொடி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற ராட்சத கிரேன் உதவியுடன்முயற்சித்துள்ளனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிலையில் பழைய கொடிமரத்தை தூக்கிய போது திடீரென்று கொடிமரத்தின் மேல் பகுதி உடைந்து அதன் பெரிய துண்டு தரையில் விழுந்துள்ளது. கொடிமரம் இடிந்து விழுந்தபோது அதை சுற்றி நின்ற பக்தர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியதால் யாரும் காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…