பக்தர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் முறிந்து விழுந்த 40 டன் எடை கொண்ட கொடிக்கம்பம்..!

Default Image

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரத்தை அகற்ற முயன்ற போது விபரீதம். 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு முன்பு 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்று இருந்துள்ளது. இது கடந்த 1963 அமைக்கப்பட்டது.

இது மிகவும் பழமையானதாக காணப்பட்டதால், புதிதாக கொடிமரம் வைப்பதற்காக அந்த பழைய கொடி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற   ராட்சத கிரேன் உதவியுடன்முயற்சித்துள்ளனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிலையில் பழைய கொடிமரத்தை தூக்கிய போது திடீரென்று கொடிமரத்தின் மேல் பகுதி உடைந்து அதன் பெரிய துண்டு தரையில் விழுந்துள்ளது. கொடிமரம் இடிந்து விழுந்தபோது அதை சுற்றி நின்ற பக்தர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியதால் யாரும் காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்