தானே மற்றும் மும்பைக்கு இடையே குளிர்சாதன பேருந்து சேவைக்கட்டணம் 40% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.
வசதியான பயணம் : தானே மற்றும் மும்பைக்கு இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தானே நகராட்சி போக்குவரத்து (டிஎம்டி) நிறுவனம் தனது குளிர்சாதன பேருந்து கட்டணத்தை 40-50% வரை குறைத்துள்ளது. பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குவதன் நோக்கமாக இந்த கட்டணக் குறைவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .
வால்வோ பேருந்து : இந்த கட்டண மாற்றம் மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதன பேருந்துகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிராந்திய போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு வால்வோ பேருந்துகளுக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்று டிஎம்டியின் போக்குவரத்து மேலாளர் பால்சந்திரா பெஹேர் கூறினார்
கட்டண விவரம் : தானே நகராட்சி போக்குவரத்து நிறுவனம் (டிஎம்டி) குளிர்சாதன பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் தற்பொழுது முதல் இரண்டு கிலோமீட்டருக்கு ரூ.20க்கு பதிலாக ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.65 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டோம்பிவலி மற்றும் பன்வெல் நகரங்களுக்கு குளிர்சாதன பேருந்து சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…