குளிர்சாதன பேருந்து சேவைக்கட்டணம் 40% முதல் 50% வரை குறைப்பு..! டிஎம்டி அறிவிப்பு..!

Default Image

தானே மற்றும் மும்பைக்கு இடையே குளிர்சாதன பேருந்து சேவைக்கட்டணம் 40% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது. 

வசதியான பயணம் :  தானே மற்றும் மும்பைக்கு இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தானே நகராட்சி போக்குவரத்து (டிஎம்டி) நிறுவனம் தனது குளிர்சாதன பேருந்து கட்டணத்தை 40-50% வரை குறைத்துள்ளது. பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குவதன் நோக்கமாக இந்த கட்டணக் குறைவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

வால்வோ பேருந்து :  இந்த கட்டண மாற்றம் மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதன பேருந்துகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிராந்திய போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு வால்வோ பேருந்துகளுக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்று டிஎம்டியின் போக்குவரத்து மேலாளர் பால்சந்திரா பெஹேர் கூறினார்

கட்டண விவரம் :  தானே நகராட்சி போக்குவரத்து நிறுவனம் (டிஎம்டி) குளிர்சாதன பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் தற்பொழுது முதல் இரண்டு கிலோமீட்டருக்கு ரூ.20க்கு பதிலாக ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.65 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டோம்பிவலி மற்றும் பன்வெல் நகரங்களுக்கு குளிர்சாதன பேருந்து சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்