சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 40 குரங்குகள்.!
தெலுங்கானாவில் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் ஒரே இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம்,மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகபுரம் கிராமத்தில் மின்சார துணை மின் நிலையத்தின் பின்னால் உள்ள புதர் ஒன்றில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது .
கடுமையான துர்நாற்றத்திற்து பிறகு சடலங்களை கண்ட கிராமவாசிகள் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க , விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும்,இந்த செயலை செய்தவர்கள் மீது விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டம் 11(எல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 429 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மஹபூபாபாத் போலீஸ் துணை ஆய்வாளர் கூறியுள்ளார்.
மேலும் கூறி அவர் உள்ளூர் மக்கள் தங்கள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்திருக்க கூடும் என்றும்,அல்லது விலங்கு பிடிப்பவர்கள் வனவிலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுத்து,அதனை காட்டில் விட இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் , அதிகப்படியான மயக்க மருந்து பயன்படுத்தியதால் பல குரங்குகள் இறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர் .ஆனால் இதுகுறித்த எதுவும் தெளிவாக தெரியவில்லை என்றும், நாங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் DFO தெரிவித்துள்ளது .
சாக்குப் பைகளில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குட்டிகள் உட்பட 40 குரங்குகள் உடல் பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது .மேலும் உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த மோசமான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.