இந்தியா முழுவதும் ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி- அமைச்சர் மன்சுக் மாண்டவியா..!

Published by
murugan

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் ஜனவரி 3-ஆம்  தேதியிலிருந்து (அதாவது இன்று) 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 15-18 வயதினருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

6 minutes ago

பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…

42 minutes ago

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

1 hour ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

2 hours ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

3 hours ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

3 hours ago