இந்தியா முழுவதும் ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி- அமைச்சர் மன்சுக் மாண்டவியா..!

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து (அதாவது இன்று) 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 15-18 வயதினருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025